• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

February 8, 2020

கோவையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.

கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ. எச் காலனியை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 46) இவர் காமராஜ புரத்தில் உள்ள ஒரு மர குடோனில் கூலி வேலை செய்து
வருகிறார். அதே குடோனில் 5 வயது சிறுமியின் பெற்றோர் வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் குழந்தையை அங்கு விளையாட விட்டு வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆனந்த் விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்ததாக தெரிகிறது.

அந்த நேரத்தில் சிறுமி அழும் சத்தத்தைக் கேட்டு பெற்றோர் ஓடி வந்தனர். அப்போது ஆனந்தின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுமியை மீட்டு அவர்கள் மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி ஆனந்தை போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க