• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

December 16, 2020 தண்டோரா குழு

மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கோரி கோவையில் உள்ள 400 பவுண்டரி தொழிற்கூடங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் 400 குறு மற்றும் சிறு பவுண்டரிகள் இயங்கி வருகின்றன. பவுண்டரி தொழில் சார்ந்த மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால் பவுண்டரி தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மூலப்பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது. எனவே, மூலப்பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்டத்தில் உள்ள 400 பவுண்டரிகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் நாள் ஒன்றுக்கு 30 கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் இத்தொழிலைச் சார்ந்துள்ள இரண்டு லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்தத் தொழிலைச் சார்ந்து இயங்கி வரும் வெட்கிரைண்டர்,என்ஜினீயரிங், மோட்டார் பம்புகள், ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில்கள் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க