• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 2Kg,5kg சிறிய வடிவிலான சமையல் எரிவாயு உருளை விற்பனை துவக்கம்

November 18, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் வடகோவை பகுதியில் உள்ள சிந்தாமணி நியாய விலை கடையில் 2 கிலோ மற்றும் 5கிலோ கேஸ் சிலிண்டர் விற்பனையினை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் .ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று அறிமுகம் செய்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,’

இரண்டு மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யும் திட்டம் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தோடு இணைந்து மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொழிலாளர்கள், சாலை மற்றும் நடைமேடைகளில் கடை அமைப்பவர்கள், மாணவர்கள், வெளியூர்களில் தங்கி வேலைக்கு செல்பவர்கள், மீனவர்கள் ஆகியோர் அதிகமாக பயன்பெறுவர்.

கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு பல்வேறு ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய நிலை தவிர்க்கப்பட்டு, முகவரிக்கான தகவல்களை மட்டும் அளித்து எளிதாக கேஸ் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளலாம்.இதனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதனால் சட்டவிரோதமாக கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவது வெகுவாக குறையும்.

மேலும் நாளைய தினம் 69ஆவது கூட்டுறவு மாநில விழா கோவை கொடிசியா வளாகத்தில் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.கூட்டுறவு துறையை புதுப்பொலிவுடன் முன் கொண்டு செல்ல முதலமைச்சர் மற்றும் அமைச்சரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலத்தில் உள்ள 5164 நியாய விலை கடைகள் ISO தரச்சான்று பெற்றுள்ளது. 2952 கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

கடன்களை பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 697 விவசாய சங்கங்களின் மூலம் 1 லட்சத்து 88 ஆயிரம் விவசாயிகளுக்கு 1231 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் உட்பட கால்நடை வளர்ப்பு அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு 801 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 8.47 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ஒரு லட்சத்து 21 ஆயிரம் விவசாயிகளுக்கு, 216.8 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பயோமெட்ரிக் மற்றும் கருவிழி பரிசோதனை ஆகியவற்றின் மூலம் கடத்தல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிட் காலகட்டத்தில் ரேஷன் கடைகளின் மூலம் உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வரும் ஆண்டுகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்தார்.

இதனையடுத்து, கோவையில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் கூட்டுறவுதுறை அரசு முதன்மை செயலாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் படிக்க