• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 119 தேர்வு மையங்களில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு

May 5, 2022 தண்டோரா குழு

கோவையில் 119 தேர்வு மையங்களில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடமாக பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில் இந்த ஆண்டு வெற்றிகரமாக பொதுத் தேர்வை நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.

பிளஸ் டூ பொதுத் தேர்வுகளை எழுதுவதற்காக கோவை மாவட்டத்தில் 119 தேர்வு மையங்கள் தயார் படுத்தி உள்ள நிலையில் 35033 பிளஸ்+2 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தொடர்ந்து கோவை மாவட்ட பள்ளிகளில் பிளஸ்+2 பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

அதே போல தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டனர். தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே ஆறடி இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர்.

மேலும் படிக்க