• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் வரும் மார்ச் 21ம் தேதி வரை கத்தோலிக்க தேவாலயங்களை மூட உத்தரவு

March 17, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களை வரும் மார்ச் 21ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகில் 146 நாடுகளுக்குப் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை, சுமார் 1.65 லட்சம் பேருக்கு இந்த தொற்றியுள்ளது, இவர்களில் சுமார் 6,500 பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 126ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களையும் வரும் மார்ச் 21ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், வரும் சனிக்கிழமை வரை நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க