• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மோக்ஷ க்ருஹா தானியங்கி எரிவாயு மயானம் அமைப்பு

February 15, 2023 தண்டோரா குழு

சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் குழுமமும் அதன் இணை அமைப்புமான ஸ்ரீ கே கோபால் நினைவு அறக்கட்டளையுடன் இணைந்து மோக்ஷ க்ருஹா தானியங்கி எரிவாயு மயானம் அமைக்கப்பட்டுள்ளது.

சி.ஆர்.ஐ.பம்ப்ஸ் குழுமமும் அதன் இணை அமைப்புமான ஸ்ரீ கே கோபால் நினைவு அறக்கட்டளையும் இணைந்து கடந்த இருபதாண்டுகாலமாக சமூக நலச் சேவைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. 2010 ல் இந்த அறக்கட்டளை மூலம் , கோவை சரவணம்பட்டியில்,’மோக்ஷ க்ருஹா’எனும் பெயரில் ஒரு எரியூட்டு மயானத்தை சமூகத்திற்கு அர்ப்பணித்து சிறப்பாக நிர்வகித்து வருகிறது. இந்த மோக்ஷ க்ருஹா எரியூட்டு மயானம், இந்தியாவிலேயே முதன் முறையாக இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில்ஸ் அமைப்பின் கிரீன் லேண்ட்ஸ்கேப்பிற்கான பிளாட்டினம் தரச் சான்று மற்றும் ஐ.எஸ்.ஓ சான்றிதழ் பெற்ற முதல் மயானமாகும்.

ஸ்ரீ கே கோபால் நினைவு அறக்கட்டளை சமூகத்திற்கு சிறந்த வசதிகளை வழங்குவதிலும் அதன் சேவைகளை மேம்படுத்துவதிலும் தொடர்ந்து முயற்சிகளை எடுத்துவருகிறது.ஸ்ரீ கே கோபால் நினைவு அறக்கட்டளையானது சி.ஆர்.ஐ குழுமத்தின் நிதி உதவியுடன் அதன் மோக்ஷ க்ருஹா எரியூட்டு மயானத்தில் புதிய முற்றிலும் தானியங்கி கேஸ் ஃபர்னஸ் உடன் 100 அடிகள் உயரம் கொண்ட சிம்னி, ஸ்கிரபர் சிஸ்டம்,ஜீரோ டிஸ்சார்ஜ் ட்ரீட்மெண்ட் பிளாண்ட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வசதிகளுடன் ரூபாய் 1.5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக இந்த ஃபர்னஸ்,பன்னடுக்கு ஏர்கண்ட்ரோல் வசதியுடன் வடிவமைப்பு கொண்டுள்ளதால் குறைந்த அளவே உமிழ்வை வெளியேற்றுகிறது.மேலும் எரியூட்டப்படவேண்டிய உடல்,டிஜிட்டல் முறையில் இயக்கப்பட்டு முழுவதும் தானியங்கிச் செயல்பாட்டுடன்,ஹைட்ராலிக் சிஸ்டம்கள் மற்றும் டிஜிடல் டச் ஸ்கிரீன் முறையில் அனைத்து செயல்பாடுகளும் இயங்கத்தக்க வகையில் அதிநவீனமான எரிவாயு எரியூட்டு மயானமாகும்.

இன்று இந்த வசதிகளை கோவை மாநகர மேயர் கல்பனா,மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் , துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சி.ஆர்.ஐ.குழுமத் துணைத்தலைவரும்,நிர்வாக அறங்காவலருமான ஜி.சௌந்தி ரராஜன்,துணை நிர்வாக இயக்குனரும்,அறங்காவலருமான ஜி.செல்வராஜ் மற்றும் சி.ஆர்.ஐ.குழுமத்தின் அதிகாரிகள் முன்னிலையில் திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணித்தனர்.

மேலும் படிக்க