• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

January 24, 2019 தண்டோரா குழு

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்தனர்.இதன் காரணமாக அப்பபகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால். போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது.

இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்த அவர்கள் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நீதிமன்றம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதே தவிர உத்திரவிட வில்லை எனவும் எனவே போராட்டம் தொடரும் எனவும் ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துகடவு, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க