• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கல்

January 30, 2019 தண்டோரா குழு

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு கோவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம் வழங்கப்பட்டது.

கோவை மகாத்மா காந்தி நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை தேர்முட்டி வீதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் திட்டத்தின் SWACHATA PAKHWADA 2019 மற்றும் இந்தியன் வங்கி சார்பில் இன்று +1, +2 படிக்கும் பெண்களுக்கு நாப்க்கின் எரியூட்டும்
இயந்திரம் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு அறையில் இருந்த இயந்திரத்தை சிறப்பு வி௫ந்தினர் முத்துலட்சுமி ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

மேலும் இந்தியன் வங்கி கோவை மண்டல மேலாளர் இராமகிருஷ்ணன் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் நிலாமணி மற்றும் சத்யபாமா,rs புரம் கிளை மேலாளர் சரளா மற்றும் பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்

மேலும் படிக்க