May 6, 2026
தண்டோரா குழு
கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குரூப் இன் அப்ளையன்சஸ் பிசினஸ், ஏர் கண்டிஷனர்களுக்கென முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய வடிவமான ‘கூல் ஸ்டுடியோ’ ஸ்டோர் மூலம் தனது பிரத்யேக பிராண்ட் அவுட்லெட்டுகளின் வலையமைப்பை விரிவுபடுத்துகிறது.
இந்த பிராண்ட்,விநியோக கூட்டாளரான ஏஎல்வி & கோ உடன் இணைந்து, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், இடையார்பாளையத்தில் அதன் முதல் ‘கூல் ஸ்டுடியோ’வைத் திறந்து வைத்துள்ளது. நுகர்வோருக்குச் சிறப்புக் குளிரூட்டும் தீர்வுகளை வாங்குவதற்கான ஒரு முழுமையான இடத்தை வழங்குகின்ற, 250 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஸ்டுடியோ, பிராண்டின் முழுமையான குடியிருப்பு மற்றும் வணிக ஏர் கண்டிஷனர்களின் வரிசையை காட்சிப்படுத்துகிறது.
வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், ஏசிகள் ஆடம்பரத்திலிருந்து, இன்றியமையாத ஒன்றாக மாறி வருகின்றன. மேலும், நுகர்வோர் சிறந்த வசதி மற்றும் செயல்திறனை வழங்கக்கூடிய ஸ்மார்ட் மற்றும் பிரீமியம் குளிரூட்டும் தீர்வுகளை தேடுகின்றனர். அதேசமயம், குறிப்பாக வணிக வளாகங்களில், டவர் மற்றும் கேசட் ஏர் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கின்ற வகையில் அதிக திறன் கொண்ட மற்றும் ஆற்றல் திறன்மிக்க அமைப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
கோத்ரேஜ் கூல் ஸ்டூடியோ வில், நுகர்வோர் ஸ்பிலிட், விண்டோ, கேசட் மற்றும் டவர் ஏர் கண்டிஷனர்கள் உள்ளிட்ட 1 டன் முதல் 4 டன் வரையிலான, 3-ஸ்டார் மற்றும் 5-ஸ்டார் ஆற்றல் மதிப்பீடுகளில் கிடைக்கும் பரந்த ஏசி வகைகளை அனுபவித்து, ஆராய்ந்து, வாங்கலாம்.
இந்தத் தொடக்கம் குறித்து கோத்ரேஜ் எண்டர்பிரைசஸ் குழுமத்தின் அப்லையன்சஸ் பிசினஸ் பிரிவின் வணிகத் தலைவர் கமல் நந்தி கூறுகையில்,
“கூல் ஸ்டூடியோ வின் இந்த தொடக்கமானது, ஏசிகளில் எங்கள் சில்லறை விற்பனை இருப்பை விரிவுபடுத்தும் பயணத்தில் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பிராண்ட் அனுபவங்களை உருவாக்குவதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேம்பட்ட குளிரூட்டும் தீர்வுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த மாதிரியான தனித்துவமான கடை வடிவங்கள் மூலம் எங்களின் முழு ஏசி போர்ட்ஃபோலியோவையும் வாடிக்கையாளர்களின் அருகில் கொண்டு செல்ல நாங்கள் நோக்கம் கொண்டுள்ளோம்.
வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் செயல்திறனில் எங்களின் புதுமைகளை நுகர்வோர் ஒரு பிரத்யேக சூழலில் ஆராய்வதற்கு வழிவகை செய்கின்ற வகையில், நாடு முழுவதும் இன்னும் பல ‘கூல் ஸ்டூடியோ’களைத் திறக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.” என்று கூறினார்.
ஏஎல்வி & கோ. நிறுவனத்தின் உரிமையாளர் தியாகராஜன் மேலும் கூறுகையில்,
“மிகவும் மதிப்புமிக்க மற்றும் நம்பகமான பிராண்டான கோத்ரேஜ் நிறுவனத்துடன் கூட்டாண்மை வைத்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பலதரப்பட்ட குளிரூட்டும் தீர்வுகளைக் கொண்ட எங்களின் பிரத்யேக விற்பனை நிலையம், கோயம்புத்தூரின் விவேகமான வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த இடமாக அமையும் என்பதில் நாங்கள் உறுதிப்பாட்டுடன் உள்ளோம்.” என்றார்.