• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பார்க் கல்விக் குழுமத்தின் “ZERO G 2026” ஆண்டு கலைவிழா கோலாகலம்

May 6, 2026 தண்டோரா குழு

கோவை கணியூரில் அமைந்துள்ள PARK கல்விக் குழுமம் சார்பில் நடத்தப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் இரண்டு நாள் ஆண்டு கலைத்திருவிழா “ZERO G 2026” இன்று (மே 5) வெகு விமர்சையாக தொடங்கியது.

PARK பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் PARK தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 22 பொறியியல் கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இரண்டு நாள் நடைபெறும் இவ்விழாவில் 30-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு கலை மற்றும் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.காலையில் தொடங்கிய இந்த கலைவிழா, மாணவர்களின் நடனம், இசை, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் செண்டை மேளம் உள்ளிட்ட நிகழ்வுகளால் வளாகத்தை விழாக்கோலமாக மாற்றியது.

முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக திரையுலக பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா மற்றும் நடிகை, பாடகி மடோன்னா செபாஸ்டின் பங்கேற்று தங்களது இசை நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் அனுஷா ரவி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, “இந்த மாலை நேரம் முழுவதும் மாணவர்களுக்கானது. அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,” என வாழ்த்தினார். மேலும், இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த ZERO G குழுவினருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க