• Download mobile app
25 Sep 2026, FridayEdition - 3880
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த நபர், போஸ்கோ சட்டத்தில் கைது

July 16, 2021 தண்டோரா குழு

கருமத்தம்பட்டி அடுத்து வளையபாளையம் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் கண்ணன் என்கிற பழனிச்சாமி(45).
இவர் கடந்த சில வருடங்களாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.பந்தல் போடும் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் இவர் உடன் பணிபுரிபவர் மகளான 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அம்மாணவியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு பள்ளி மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து பள்ளி மாணவி காணாமல் போனது குறித்து பெற்றோர்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் பள்ளி மாணவியுடன் சோமனூர் அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் இருவரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்தது அந்த நபர் ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.14 வயது பள்ளி மாணவியை கடத்தி 45 வயது மதிக்கத்தக்க நபர் திருமண ஆசை வார்த்தை கூறி கடத்திச்சென்று திருமணம் செய்தது அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க