• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பட்டா வழங்க கோரி அரை நிர்வாணத்துடன் தேசிய கொடியுடன் மனு அளிக்க முயற்சி

January 29, 2018 தண்டோரா குழு

கோவையில் அரை நிர்வாணமாக இடுப்பில் இலைகளுடன் தேசிய கொடியை ஏந்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் 7 வது வார்டை சேர்ந்த சரவணன் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிருப்தி அடைந்த அவர், இன்று ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

மேலும் அவர், இடுப்பில் இலைகளை கட்டிக் கொண்டு, மண்டை ஓடுகளை கழுத்தில் அணிந்து , தேசிய கொடியை ஏந்தியவாறு  பட்டாகோரி போராட்டம் நடத்தினார். பட்டாக் கோரி இரு முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டும் , எவ்வித நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் இன்று நூதன முறையில் தர்ணா நடத்தியதாகவும், பட்டா கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க