January 28, 2026
தண்டோரா குழு
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் இந்திய சுற்றுலா முகவர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 8 மாநில பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்திய பயணச்சந்தை குறித்து கலந்துரையாடல் சுற்றுலா மேம்பாட்டு அமைக்கும் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஓட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் துபாய், அந்தமான், சிங்கப்பூர், பூட்டான்,பாலி,மலேசியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்களுடன் தமிழ்நாடு, கேரளா,கர்நாடக,மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கண்காட்சியாளர்கள் பங்கேற்று புதிய தொழில் வாய்ப்புகளை ஆராயவும் சுற்றுலா துறையின் நவீன போக்குகளை அறிந்து கொள்ள கலந்துரையாடினர்.
இது குறித்து நிர்வாகிகள் கூறுகையில்:-
இந்திய அரசு மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவே சுற்றுலாத் துறையை நாட வேண்டும் ஆன்லைனில் மூலமாக சுற்றுலா செல்லலாம் என பணம் கொடுத்து ஏமாந்து விடக்கூடாது என்றும் இந்தியா சுற்றிப் பார்க்க ஐந்து ஜென்மம் கூட நமக்கு போதாது இங்கு 44 ஆயிரம் கோவில்கள் உள்ளது.
சுற்றுலாத்துறையை பொறுத்தவரை பத்தாவது முறையாக நாம் முன்னிலையில் இருக்கிறோம் குறிப்பாக விசா இல்லாமல் நேபால் போட்டானுக்கு செல்லலாம் ஆனால் ஓட்டர் ஐடி மிக முக்கியம் அந்தமானுக்கு சென்று வர வெறும் 32 ஆயிரம் ரூபாய் இருந்தாலே போதும் நான்கு நாட்கள் அங்கு இருந்து உணவு மற்றும் தங்கும் வசதி கூட இருக்கிறது என தெரிவித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தமிழ்நாடு பிரிவின் தலைவர் பி.அசோக் குமார் தேசிய மற்றும் மாநில விருது பெற்ற எஸ்.ராதாகிருஷ்ணன்,மாநில விருது பெற்ற பஞ்சரவதனம் ராதாகிருஷ்ணன்,மற்றும் இந்திய உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர்கள் சங்க தமிழ்நாடு பிரிவின் செயலாளர் லயன் என்.பாலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறையிடம் இணைந்து ஜூபிடர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது . ஜூபிடர் டிராவல் எக்சிபிஷன் நிறுவனம் , சுற்றுலாத் துறை கண்காட்சிகளை நடத்துவதில் முன்னணியில் உள்ளது.மேலும் இந்நிறுவனம் தொழில் வல்லுனர்களை ஒன்றிணைத்து வணிக வளர்ச்சியை மேம்படுத்தி வருகிறது.பயண வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன்,துறை சார்ந்த வளர்ச்சிக்கும் நெட்வொர்க்கிங்கிற்கும் ஒரு சிறந்த தளத்தை இந்நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது.