• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தூய்மை பணியில் ஈடுபட்ட பெண் கவுன்சிலர்

April 17, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியிடம் பலமுறை புகார் தெரிவித்தும் தூய்மை பணியை மேற்கொள்ளப்படாததால்,பெண் கவுன்சிலர் ஒருவர் தானே களத்தில் இறங்கி தூய்மை பணியில் ஈடுபட்டது வைரலாகி வருகிறது.

கோவை மாநகராட்சி பகுதியான வடவள்ளி பகுதியில் உள்ள பூங்கா மற்றும் தெருக்களில் சரிவர தூய்மை பணி மேற்கொள்ளப்படவில்லை என அப்பகுதியை சேர்ந்த மக்கள் 38வது வார்டு அதிமுக கவுன்சிலரான ஷர்மிளா சந்திரசேகரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு,கவுன்சிலர் தூய்மை பணி மேற்கொள்ள தெரிவித்தும் எந்த விதமான பணியும் நடைபெறவில்லை.

பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டததால் கவுன்சிலர் ஷர்மிளா தானே இறங்கி தூய்மை பணியை மேற்கொள்ள திட்டமிட்டார்.அதன்படி முதற்கட்டமாக வடவள்ளி பகுதியில் கோவை மாநகராட்சிக்கு சொந்தமான க்ரியோ கார்டன் பார்க் புதர்களாக காட்சியளித்து சமூக விரோதி கூடாரமாக மாறியது.இதனை சுத்தம் செய்யும் வகையில் பெண் கவுன்சிலர் ஷர்மிளா புதர்களை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கவுன்சிலருடன் இணைந்து பணியை மேற்கொண்டனர்.கடந்த 2ஆண்டுகளாக பூங்காக்கள் பராமரிக்கபடாததால் இங்கு இருக்கும் பொருட்கள் திருடு போய்விட்டதோடு மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். தற்போது பெண் கவுன்சிலர் ஒருவர் களத்தில் இறங்கி தூய்மை பணி மேற்கொள்ளும் வீடியோ வைராலகி வருகிறது.

மேலும் படிக்க