• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் தினமும் 5 ஆயிரம் பம்புசெட்கள் உற்பத்தி

February 16, 2023 தண்டோரா குழு

கோவையில் தினமும் 5 ஆயிரம் பம்புசெட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என பம்புசெட் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோடை காலத்தில் பம்புசெட்களின் தேவை அதிகரிக்கும். இதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் பம்புசெட் உற்பத்திகள் அதிகரிக்கப்பட உள்ளன. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தயாரிக்கப்படும் பம்புகள் உலகளவில் சிறந்து விளங்குகின்றன. நாடு முழுவதும் விவசாயம் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் பம்புசெட்டுகளில் 60 சதவீதத்துக்கும் மேல் கோவையில் உற்பத்தி செய்யப்படும் பம்புசெட்டுகள் ஆகும்.

கோவை மாவட்டத்தில் 3,500க்கும் மேற்பட்ட பம்புசெட் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. இங்கு, உற்பத்தி செய்யப்படும் பம்பு செட்டுகள் கர்நாடகா, ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், மேற்கு வங்காளம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. கோவையில் உள்ள பம்புசெட் நிறுவனங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இதுகுறித்து கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் மணிராஜ் கூறியதாவது:

குளிர்காலம், மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களினால் அன்மை காலமாக பம்புசெட் மற்றும் உதிரிபாகங்களின் உற்பத்தி சரிவை நோக்கி நகர்ந்தன. தினமும் 2 ஆயிரம் வரையிலான பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனால் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டு, உற்பத்தியும் பெரும் அளவு சரிந்தன. தற்போது குளிர்காலம் முடிந்துள்ளது. கோடை காலம் நெருங்கி வருகிறது. இதனால் பம்புசெட்களுக்கு தேவை அதிகரிக்கும்.

நாடு முழுவதும் தினமும் வீடு, விவசாயம் மற்றும் இதர தேவைகளுக்கு 25 ஆயிரம் பம்புசெட்கள் விற்பனை ஆகும் என எதிர்பார்க்கிறோம். இதனால் பம்புசெட் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தினமும் 25 ஆயிரம் பம்புசெட்கள் கோவை மாவட்டத்தில் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். இதன் முதல் கட்டமாக தற்போது 5 ஆயிரம் பம்புசெட்கள் தினமும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க