• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறுத்தையை பிடிக்க நான்காவது நாளாக வனத்துறையினர் தீவிரம்

January 20, 2022 தண்டோரா குழு

கோவையில் பாழடைந்த குடோனில் பதிங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்க 4 வது நாளாக வனத்துறையினர் பொறி(கூண்டு) வைத்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் இன்றும் வெளியிட்டுள்ளனர்.

கோவை குனியமுத்தூர், சுகுணாபுரம், கோலமாவு மலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்றுவயதுடைய ஆண் சிறுத்தை கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம் வாளையாறு சாலையில் உள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அந்த பாழடைந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத்துறையினர் குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து கூண்டுகளில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து அதனைபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் ஐந்து காமிராக்கள் மூலம் சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தொடர்ந்து நான்காவது நாளாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் நேற்றை தொடர்ந்து இன்று அதிகாலை நேரத்தில் சிறுத்தை நடமாடும் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.அதில் அதிகாலை அளவில் சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமிராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பவும் பதிவாகி உள்ளது. கடந்த மூன்று தினங்கள் இரவு பகலாக வனத்துறையினர் கூண்டு வைத்து காத்திருந்தும் சிறுத்தை கூண்டுக்குள் அகப்படாமல் போக்கு காட்டி வருகிறது.

கூண்டுக்கு அருகில் வரும் சிறுத்தை, புத்திசாலிதனமாக அப்படியே திரும்பி செல்வதும், குடோனைவிட்டு வெளியேற இடம் தேடுவதுமாக உலா வருகிறது. இந்த சிறுத்தை, வனத்திலிருந்து மற்றொரு பலம் வாய்ந்த சிறுத்தையால் விரட்டபட்டிருக்கலாம் என கூறும் வனத்துறையினர் ஏற்கனவே கூண்டில் பிடிப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்ட சிறுத்தையாக இருக்க கூடும் எனவும் சந்தேக்கின்றனர்.

மேலும் மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்தால் குடோனில் உள்ள பொருட்களில் சிக்கி சிறுத்தை காயமடைய வாய்ப்புள்ளதை சுட்டிக்காட்டும் வனத்துறை அதிகாரிகள் நான்காவது நாளாக காத்திருந்து அதனை கூண்டிலேயே பிடிக்க தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க