• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சிறார் ஆபாச படங்கள் பார்த்த இருவர் அடுத்தடுத்து கைது

January 5, 2020 தண்டோரா குழு

சிறார் ஆபாச படங்கள் பதிவிறக்கம் மற்றும் பார்த்தவர்கள் என கோவையில் அடுத்தடுத்து இருவரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகத்தில் குழந்தைகளின் ஆபாச படங்கள் பயிர்கள் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் தவறுகளை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மற்றும் சென்னையில் அடுத்தடுத்து இருவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில சைபர் கிரைம் போலீசார் 40க்கும் மேற்பட்ட ஐபி எண்களை கோவை மாவட்ட போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முகநூலில் சிறார் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்த வழக்கில் பொள்ளாச்சியில் தங்கி பணியாற்றிவந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரெண்டா பசுமாடாரி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று கோவை தனியார் கல்லூரியில் ஓட்டுனராக பணியாற்றி வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரின் செல்போன்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கோவை மாவட்டத்தில் சமூக வலைதளங்களில் சிலர் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் பட்டியல் விவரங்களை சேகரித்து வருவதாகவும் விரைவில் சட்டப்படி கைது நடவடிக்கை தொடரும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்க