• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காடுகளை காக்க வலியுறுத்தி பேரணி

January 19, 2019 தண்டோரா குழு

காடுகள் ஆக்கிரமிப்பு, காடுகளை அழித்தல், வளங்களை சுரண்டுதல் போன்றவற்றை தடுக்க வலியுறுத்தி கோவையில் பள்ளி மாணவர்கள், ஆர்வலர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

சமீபகாலமாக அதிகரித்து வரும், காடுகள் ஆக்கிரமிப்பு, காடுகளை அழித்தல், வளங்களை சுரண்டுதல் போன்றவற்றை தடுக்க வலியுறுத்தியும், காடுகளை காப்பதன் அவசியத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், தன்னார்வ அமைப்பின் சார்பில் பேரணி நடைபெற்றது.

இப்பேரணியானது கோவை பந்தய சாலையில் துவங்கியது.இந்த பேரணியில் பள்ளி மாணவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காடுகளின் அவசியத்தை வலியுறுத்தி பதாகைகளை கையில் மாணவர்கள் பிடித்து சென்றனர். உயிர் சூழலுக்கு காடுகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்று உள்ளது என அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க