• Download mobile app
07 Feb 2026, SaturdayEdition - 3650
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு

January 22, 2019 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

கோவையை அடுத்த சிங்காநல்லூர் பகுதியில் திருநகர் குடியிருப்போர் நல சங்கம். இந்த சங்கத்தின் சார்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய நான்கு தொழிலார்களை அழைத்துள்ளனர். அங்கு வந்த தொழிலாளர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது முருகன் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். அவரை காப்பாற்ற அவரது சகோதரார் பாண்டித்துரை முயன்ற போது அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கழிவுநீர் தொட்டியில் இருந்து அவர்களது உடலைகளை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க