• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை இல்லை – மாவட்ட ஆட்சியர்

March 23, 2020 தண்டோரா குழு

கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, கோவையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த கோவை மாணவி ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனை முன்பு மாநகராட்சி சார்பில் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். மேலும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா வார்ட்டை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவையில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிட்டுள்ளது.கோவையில் முழுமையாக சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எல்லையில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 வரை மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டும்.மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் கொரோனா பாசிட்டிவ் வந்துவர் மருத்துவமனையில் நலமாக இருக்கிறார்.கோவையில் கட்டாய ஊரடங்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை இல்லை எனவும் ராசாமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க