• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கஞ்சா விற்ற வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேர் கைது

December 23, 2019

கோவையில் கஞ்சா விற்பனை செய்ததாக வடமாநில இளைஞர்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.

கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தடைசெய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த தகவலையடுத்து கோவை கடைவீதி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் உக்கடம், கடைவீதி, பகுதிகளில் ரோந்துபணியில் ஈடுபட்ட போலீசார் அந்தபகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த வாலிபர்களை அழைத்து விசாரித்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுவந்ததை ஒப்புக்கொண்டனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் கோவை பொம்மிசெட்டி வீதியை சேர்ந்த ஜெயபால், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த திரன்மஹரனா, மற்றும் அதே மாநிலத்தை சேர்ந்த பருண்டக்கு என தெரியவந்தது. இதையடுத்து, இவர்களிடம் இருந்து 1.300 கிலோகிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவுசெய்து மூவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க