• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உலக சாதனை முயற்சியாக வேஸ்ட் பேப்பர் மூலம் பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி குழந்தைகள்

January 28, 2019 தண்டோரா குழு

கோவையில் உலக சாதனை முயற்சியாக கோவை தனியார் அரங்கில் பள்ளி குழந்தைகள் வேஸ்ட் பேப்பர் போன்றவைகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

கோவை தனியார் மாலில் உலக சாதனை முயற்சியாக தமிழ்நாடு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வை பள்ளி குழந்தைகள் செய்து காட்டினர். இதில் 20 அடி நீளம் மற்றும் 10 அடி அங்குலம் கொண்ட வேஸ்ட் பேப்பர் மற்றும் காகித வேஸ்ட் மற்றும் அட்டை பெட்டிகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த உலக சாதனை முயற்சி நிகழ்ச்சியில் குழந்தைகள் 4, வயது முதல்,12 வரை ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

மேலும் இதில் பிளாஸ்டிக் கடல் மாசுபடுவதை உணர்த்துவதாக ஒ௫ பக்கமும்,மாசு இல்லாத தோற்றத்தை மறுபக்கமும் குழந்தைகளுக்கு எளிதாக புரியும் வகையிலும் இந்த உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது இந்த நிகழ்வில் 100 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்று இந்த சாதனை முயற்சி செய்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு வி௫ந்தினராக சொர்னலதா மற்றும் பிஜித்ரா,அமிர்தா,சுரேஷ்குமார்,ஹரி ,பாலாஜி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க