• Download mobile app
23 Sep 2026, WednesdayEdition - 3878
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்து முன்னணி அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

March 10, 2020

காட்டூர் ரங்கே கோணார் வீதியில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.இங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இன்று காலை பத்து மணிக்கு அலுவலக ஊழியர் திறக்க வந்தபோது உடைந்த பாட்டில் கிடப்பதை கண்டு இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து காவல்துறையினர் தகவல் கிடைக்க பெற்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்க்கு வந்த சட்டம் ஒழுங்கு துனை ஆனையர் பாலாஜி சரவணம் காவல்துறையினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

மேலும் அங்கு அருகில் சிசிடிவி கேமராவில் சம்பவம் தொடர்பாக பதிவாகி உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் உள்ளனர். இதன் காரணமாக போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க