• Download mobile app
16 Apr 2024, TuesdayEdition - 2988
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

June 8, 2023 தண்டோரா குழு

கோவை ஜி.டி டேங்க் பகுதியை சேர்ந்தவர் சின்னையா (26).இவரது மனைவி தனலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் இரவு வீட்டில் இருந்த போது பனிக்குடம் உடைந்தது.இதனால் மிகுந்த வலியுடன் துடித்து வந்தார்.இதையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வந்தது. அதில் தனலட்சுமியை அழைத்துக்கொண்டு குறிச்சி சுகாதார நிலைய மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.அப்போது, ரயில் மண்டபம் அருகே வந்த போது தனலட்சுமிக்கு வலி அதிகரித்தது. மேலும் குழந்தையின் தலை வெளியே வந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ நிபுணர் கற்பகம், சாலை அருகே ஆம்புலன்சை நிறுத்தி ஓட்டுநர் யுவராஜ் உதவியுடன் பிரசவம் பார்த்தனர்.அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.அவசரம் கருதி பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டு குவிந்தது

மேலும் படிக்க