• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து விதைச் சான்று அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது

September 13, 2021 தண்டோரா குழு

கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் சு பழனிச்சாமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் சு பழனிச்சாமி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.

இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும்,சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை நேரிடக் கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் கொங்கு பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க