• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும் – ஜவாஹிருல்லா

January 18, 2019 தண்டோரா குழு

கோடநாடு விவாகரத்தில் முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

கோவையில் மனித நேய மக்கள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்,

உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் மத்திய அரசு இடஒதுக்கீடு செய்ததைக் வன்மையாக கண்டிக்கிறோம். இது சமூக நீதிக்கு எதிரான ஒன்று. கல்வியிலும் ,சமூக ரீதியிலும் பின் தங்கியவர்களுக்கு தான் இடஒதுக்கீடுகளே தவிர, பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு அல்ல. பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களைக் காலதாழ்த்தாமல் விடுவிக்க வேண்டும். அதேபோல் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள முஸ்லீம் சிறைவாசிகளைக் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பினர் முஸ்லீம்களைக் குறிவைத்து விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

மேலும் கோடநாடு விவாகரத்தில் முழுமையாக விசாரணை நடைபெற வேண்டுமென்றால்,முதல்வர் பழனிச்சாமி பதவி விலகுவதே நியாயமாக இருக்கும்..எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க