• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொறடா ராஜேந்திரனை நீக்கக் கோரி சபாநாயகரிடம் வெற்றிவேல் மனு!

September 11, 2017 தண்டோரா குழு

அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சபாநாயகர் தனபாலிடம் மனு அளித்துள்ளார்.

சென்னைத் தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை இன்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் எம்எல்ஏ சந்தித்தார். அப்போது அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்க வலியுறுத்தும் கடிதத்தை சபாநாயகரிடம் வெற்றிவேல் அளித்தார்.

முதல்வரை மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதனால் தன்னை ஆலோசிக்காமல் ஆளுநரிடம் மனு அளித்த 19 எம்.எல்.ஏ.,க்களையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி சபாநாயகர் தனபாலுக்கு, அ.தி.மு.க., வின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார்.மேலும் செப்.,18 ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் அதிமுக கொறடா ராஜேந்திரனை நீக்கக்கோரி சபாநாயகர் தனபாலிடம், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல் புகார் மனு அளித்துள்ளார்.மேலும் கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படும் அவரை நீக்க வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க