• Download mobile app
07 Aug 2026, FridayEdition - 3831
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா வைரஸ் எதிரொலி: கோவையில் 40 திரையரங்குகள் மூடல்

March 17, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் உள்ள 40 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் பொதுமக்களின் நலனுக்காக எடுக்கும் முடிவுகளை தியேட்டர் உரிமையாளர் சங்கங்கள் ஆதரிக்கும் எனவும் அதன் செயற்குழு உறுப்பினர் பால
சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,திரையரங்குகள், பொழுதுபோக்கு தளங்கள் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ஆம் தேதி வரை மூட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று அரசின் உத்தரவுப்படி பல்வேறு வணிக வளாகங்கள் பள்ளி கல்லூரிகள் ஆகியவை மூடிய நிலையில் இருந்தன. அதேபோல சினிமா தியேட்டர் போன்ற பொழுதுபோக்கு தளங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவையில் உள்ள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கம் எடுக்கும் பொது மக்களின் நலனுக்கான முடிவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்,

இன்று தொடங்கிய திரையரங்க மூடல் அரசு அறிவித்தபடி தொடரும் என்றதுடன் கோவையைப் பொருத்தவரை மொத்தம் 40 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க