• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொடநாடு ஆவண வீடியோ: தெகல்கா முன்னாள் ஆசிரியர் மீது சைபர் கிரைம் போலீஸ் வழக்குபதிவு

January 12, 2019 தண்டோரா குழு

கொடநாடு கொலை, கொள்ளை பற்றிய வீடியோ வெளியிட்ட தெகல்கா இணையத்தள முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மேத்யூஸ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின், சைபர் கிரைம் பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டு மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கோத்தகிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி ஏப்ரல் 28-ஆம் தேதி உயிரிழந்தார். அதைபோல் இவரது கூட்டாளி சயன், தனது மனைவி வினுபிரியா, மகள் நீது ஆகியோருடன் ஏப்ரல் 29-ஆம் தேதி கேரளத்துக்கு காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், வினுபிரியா, நீது ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த சயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில், தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் கொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்டுள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்து உள்ளார். மேலும், கோடநாடு எஸ்டேட்டில் ஆவணங்கள் பலவற்றை எடுப்பதற்காக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் என்பவர் கேரளாவிலிருந்து கொள்ளையர்களை அழைத்து வந்து கொள்ளை நடத்தியதாகவும், அந்த ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட பிறகு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் வரிசையாக கொல்லப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அப்போது முதல்வர் எடப்படி பழனிசாமி குறித்தும் அவர் குற்றஞ்சாட்டினார். எனினும், இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் பழனிச்சாமி விளக்கமளித்தார்.

இந்நிலையில் கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர். மேலும், ஆவணப்படத்தில் பேட்டியளித்த மனோஜ், சயான் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க