• Download mobile app
20 Oct 2025, MondayEdition - 3540
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் பிங்க் நிறத்தில் ஒளிர்ந்த ரேஸ் கோர்ஸ்

October 6, 2025 தண்டோரா குழு

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தாமஸ் பார்க்கில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள்,சிறுவர்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். அந்தப் பகுதியே பரபரப்பாகக் காணப்பட்டது. கூடியிருந்த அனைவரிடம் ஓர் அரிய நிகழ்வைக் காணப்போகும் ஆர்வம் குடிகொண்டிருந்தது.விஷயம் கேள்விப்பட்டவுடன் நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது.

குறித்த நேரத்தில் கூட்டத்தினரின் உற்சாக ஆரவாரத்திற்கிடையே அந்த அதிசயம் நடந்தேறியது!ஆம்.தாமஸ் பார்க் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் அகண்ட எல்இடி திரையுடன் கூடிய பிரம்மாண்ட மீடியா ட்ரீயும் அந்தப் பகுதி முழுவதும் பிங்க் நிறத்தில் ஒளிர ஆரம்பித்து பார்வையாளர்களைப் பரவசப்படுத்தியது. அவர்களில் பலத்த கரவொலி அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது.இதன் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில்
புதுமையான நிகழ்ச்சிக்கு விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தது.

அது சரி,எதற்காக பிங்க் வண்ணம் என்ற கேள்வி எழலாம்.மார்பக புற்றுநோயைக் குறிக்கும் வகையிலும் நோயாளிகளின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காகவும் பிங்க் நிறம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.பிங்க் வண்ண ரிப்பன் உலகம் முழுவதும் மார்பக புற்றுநோயின் அடையாளச் சின்னமாக விளங்குகிறது. மேலும் மார்பக புற்றுநோயை வெற்றிகொள்வதில் எடுத்துவரும் முயற்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கும் ஆதரவு தெரிவிக்கும் அடையாளமாகவும் பிங்க் வண்ணம் இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக ( பிங்க் அக்டோபர்) அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் புற்றுநோய்க்கு என இம்மருத்துவமனையில் ஒரு ஒருங்கிணைந்த புற்றுநோய் மையம் மற்றும் ஒரு பிரத்யேக மார்பக புற்றுநோய் மையமும் செயல்படுகின்றன. இவற்றில் இருக்கும் சிகிச்சை வசதிகள் உலகின் மிகச்சிறந்த மருத்துவமனைகளுக்கு இணையானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நோயாளிகள் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சைக்கு வந்தால் இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சைகள் அளித்து குணப்படுத்திவிடமுடியும். வருடா வருடம் உலகளவில் 5 இலட்சத்திற்கும் அதிகமான பெண்கள் மார்பக புற்றுநோயால் இறக்கிறார்கள் என்பது துயரம் தரும் செய்தி. நம்பிக்கை அளிக்கும் செய்தி என்னவென்றால் ஆரம்ப நிலை புற்றுநோய்களில் 90 சதம் குணப்படுத்திவிடக் கூடியவை.

பொதுமக்களிடையே, குறிப்பாக பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் பிங்க் வண்ண நிகழ்ச்சியுடன் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியும் அக்டோபர் 5-ம் தேதி நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் பெரும்பாலானோர் ஆர்வத்துடன் கையெழுத்திட்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வுகளில் திரளான பொதுமக்கள், மார்பக புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் கேஎம்சிஹெச் ஊழியர்கள் ஆகியோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, மற்றும் கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி அவர்கள் துவக்கிவைத்த இந்நிகழ்ச்சியில் கோவை நகரின் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார் IPS, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் IPS ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையத்தின் முதன்மை ஆலோசகர் டாக்டர் ரூபா அவர்களும் இதில் கலந்துகொண்டார்.

கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையமானது அனைத்துவித சிகிச்சைகளையும் ஒரே கூரையின் கீழ் அளிக்கும் ஒரு முழுமையான சிகிச்சை மையமாக 2013-ம் ஆண்டுமுதல் செயல்பட்டுவருகிறது. சிறந்த நிபுணர்கள், அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப உதவியுடன் நோயாளிகளுக்கு ஆலோசனை, பரிசோதனை, சிகிச்சை ஆகிய அனைத்தும் உள்ளடக்கிய மருத்துவ சேவைகளை உலகத்தரத்துக்கு நிகராக வழங்கிவருகிறது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்படும் வேளையில் கேஎம்சிஹெச் மார்பக சிகிச்சை மையம் தனது 12-வது ஆண்டுவிழாவைக் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகச்சிறந்த 3D மேமோகிராம், அதிநவீன அல்ட்ராசவுண்ட் சிஸ்டம், 3T எம்ஆர்ஐ, மற்றும் தமிழகத்தில் முதன்முறையாகத் துவக்கப்பட்ட Symbia Pro.specta SPET/CT ஸ்கேனர் ஆகியவற்றுடன் இம்மார்பக மையம் பலவிதமான தழும்பற்ற அறுவை சிகிச்சைகள் செய்திடும் திறன் பெற்றதாகும்.

மேலும் படிக்க