• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

December 21, 2020 தண்டோரா குழு

கேஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து மக்களின் அத்தியாவசிய தேவையாக எரிபொருள்கள் உள்ள நிலையில் மத்திய அரசு சிலிண்டரின் விலையை உயர்த்தி உள்ளது. இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.மானியத்தை விட்டு தர கோரி மத்திய அரசு கேட்டு கொண்டதை அடுத்து சிலர் அதனை விட்டு கொடுத்த நிலையில் மற்றவர்களுக்கு மானிய தொகை வங்கிகளில் செலுத்தபட்டு வந்த நிலையில் அதனை மத்திய அரசு நிறுத்தியது.ஒரு சிலிண்டரின் விலை 600 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யபட்ட நிலையில் ஒரு மாத காலத்திற்குள் மட்டும் 100 ரூபாயை மத்திய அரசு உயர்த்தி உள்ளது.இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிப்பிற்க்கு உள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக சொத்து பாதுகாப்பு குழு துனை தலைவர் பொங்கலூர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கி துவக்கி வைத்தார்.இதன் பின்னர் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் விலையை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேணும் என வலியுறுத்தியவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாநில மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் மீனா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
தலைமை கழக பேச்சாளர் ஈஸ்வரி ராதாகிருஷ்ணன்,கிழக்கு மாவட்ட செயலாளர்
சரஸ்வதி புஷ்பராஜ்,மேற்கு மாவட்ட செயலாளர் வானதி நாகராஜ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 300கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க