• Download mobile app
26 Sep 2026, SaturdayEdition - 3881
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கெம்பட்டி காலனியில் செந்நாய் வதந்தியால் பரபரப்பு

September 28, 2021 தண்டோரா குழு

கோவை உக்கடம் பெரிய குளத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன் செந்நாய் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது.

காட்டில் இருந்து வழிதவறி வந்த செந்நாயை வனத்துறையினர் மீண்டும் வனத்திற்கு விரட்டி அடித்தனர். இந்நிலையில், இன்று காலை பேரூர் சாலையில் உள்ள கெம்பட்டி காலனியில் செந்நாய் வந்து 3 நபரை கடித்து காயப்படுத்தியதாக தகவல்கள் பரவியது.‌

இதையடுத்து, வனத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், மூன்றுக்கும் மேற்பட்ட நபர்களை கடித்தது, நாட்டு நாய் என மாநகராட்சி கால்நடை மருத்துவர் உறுதி செய்தார்.

இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் நாட்டு நாயை பிடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க