நடிகை மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவின் கடவுச் சீட்டைப் புதுபிக்க மறுத்த விவகாரத்தில் சென்னை மண்ட கடவுச் சீட்டு அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) கூறியதாவது:
“கடந்த 2௦12ம் ஆண்டு சென்னை கடவுச் சீட்டு அலுவலக அதிகாரிகள் எனது கடவுச் சீட்டைப் புதுப்பித்துத் தந்தனர். இது 2௦22ம் ஆண்டு வரை செல்லுபடியாகும்.
தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ததால் எனது கடவுச் சீட்டின் பக்கங்கள் நிரம்பிவிட்டன. மீண்டும் வெளிநாடு செல்வதற்குப் பக்கங்கள் இல்லாததால் கூடுதல் தாள்கள் இணைத்துக் கொடுக்கும்படி விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால், அதிகாரிகள் 2௦11ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் எனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட வழக்கைக் காரணமாக வைத்து எனது கடவுச் சீட்டைப் புதுப்பிக்காமல் நிராகரித்தனர்.
இதனால், மீண்டும் குடும்பத்துடன் வெளிநாடு செல்லும் திட்டம் தடைப்படுகிறது. மண்டல அதிகாரிகளின் கவனத்திற்கு பல கடிதங்கள் கொடுத்ததும் அவர்கள் கண்டுக்கொள்ளாததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தேன். அதை விசாரித்த நீதிபதிகள் சென்னை மண்டல கடவுச் சீட்டு அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்