• Download mobile app
17 Apr 2026, FridayEdition - 3719
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடியரசு தலைவருக்கு ஈமெயில் அனுப்பினார் நீதிபதி கர்ணன்

May 19, 2017 தண்டோரா குழு

உச்சநீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, நீதிபதி கர்ணன் சார்பில் குடியரசு தலைவருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் அவரை கைது செய்ய கொல்கத்தா போலீசார் கடந்த சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டுள்ளனர். ஆனால் அவர் தலைமறைவாக உள்ளதால் கைது செய்ய முடியவில்லை.

இதற்கிடையில்,தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மனுவை விசாரித்த நீதிமன்ற அமர்வு, அவசரமாக விசாரிக்க மறுப்பு தெரிவித்தது. மனு எப்போது விசாரணைக்கு வருகிறதோ, அப்போது எடுத்துக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனால், அதிருப்தியடைந்துள்ள நீதிபதி கர்ணன், குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜியிடம் முறையிட இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீதிபதி கர்ணன் சார்பில் வழக்கறிஞர்கள் நெடும்பரா, பிலிப் ஆகியோர் குடியரசு தலைவருக்கு ஈமெயில் அனுபியுள்ளதாக கூறப்படுகிறது.எனினும்,அத்தகைய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என குடியரசு தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.

மேலும் படிக்க