• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியரசுதின விழா அணிவகுப்பில் தொடர்ந்து 6 – வதுமுறை ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள்

December 23, 2020 தண்டோரா குழு

வருடா வருடம் ஜனவரி 26 ஆம் தேதி தலைநகர் புதுதில்லியில் இந்தியாவின் குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கோயமுத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச்சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்டம்(NSS)மற்றும் தேசிய மாணவர் படை(NCC) மாணவர்கள் இந்த ஆண்டோடு சேர்த்து தொடர்ந்து6 வதுமுறை பங்கேற்று தொடர் சாதனைப்படைத்துள்ளனர்.

இந்த அணிவகுப்பில் என்.எஸ்.எஸ். அணியின் சார்பில் மாணவர் பி.பிரவின்குமார் கலந்து கொண்டு கல்லூரிக்குப் பெருமைசேர்த்துள்ளார். நவம்பர் 27 முதல் டிசம்பர் 6 வரை திருச்சியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான முதல்கட்ட பயிற்சியில்பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக இக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பி.பிரவின்குமார் மற்றும் மாணவி எஸ்.பவித்ரா ஆகியோர் தோ்வாகி பத்துநாட்கள் பயிற்சிபெற்றனர்.

இந்தப் பயிற்சியில் தங்களது தனித் திறன்களை வெளிப்படுத்தி தற்போது மாணவா் பி.பிரவின்குமார் புதுதில்லியில் குடியரசுத்தலைவரின் முன்னிலையில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ். அணியின் சார்பாக பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

இம்மாணவர் தன்னுடைய சிலம்பம் உள்ளிட்ட கலைத்திறன் வெளிப்பாடு, சமூககளப்பணி அனுபவம், அறிவுத்திறன்சார்ந்தநேர்காணல் ஆகிய பல படிநிலைக்கடந்து இச்சாதனைக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என்.எஸ்.எஸ்அணியில்மட்டுமல்லாது இதே கல்லூரியின்மாணவர் ஆா்.எஸ்.அரவிந்த் தமிழ்நாடுஎன்.சி.சி. அணியின் சார்பாக அதேகுடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளார்.இம்மாணவர் மதுரையில் நவம்பா் 16 முதல் டிசம்பர் 16 வரைமூன்று கட்டங்களாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டு தனது தனித்திறன்களை வெளிப்படுத்தியதோடு தனது விடா முயற்சியாலும் இந்தச்சாதனை யினைப் படைத்துள்ளார்.

மேலும், மாணவி எஸ்.பவித்ரா தமிழக அளவில் சென்னையில் ஆளுநா் முன்னிலையில் நடைபெறவுள்ள குடியரசுதினவிழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ்சார்பில் பங்கேற்கவுள்ளார். இவ்வாறு ஜனவரி26 குடியரசு தினவிழா நாளில் இந்தியாவின் தலைநகர் முதல் தமிழகத்தின்தலைநகர்வரையிலும்அரசாங்கத்தின் சார்பாக நடக்கவுள்ள அணிவகுப்பில் கோவையினைச்சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர்கலந்து கொள்வதோடு, தொடர்ந்து 6 முறை இச்சாதனையினை நிகழ்த்தியதன் மூலம் இக்கல்லூரி நாட்டுநலப்பணியாற்றுவதிலும், சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதிலும் தனிமுத்திரை பதித்து வருகிறது.

நமது இந்திய தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமைசேர்த்து சாதனை படைக்கவுள்ள மாணவா்களுக்கு எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மி நாராயணஸ்வாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கல்லூரியின் முதல்வா் மற்றும் செயலா் முனைவர் பி.எல்.சிவக்குமார் மாணவா்களை வாழ்த்தியதோடு இனிவரும்காலங்களிலும் தங்கள் கல்லூரி மாணவா்களின் சாதனைகள் தொடரும் என்று பெருமிதத்தோடு தொிவித்தார்.

கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலா் பேராசிரியர் பிரகதீஸ்வரன் குடியரசு தினவிழா அணிவகுப்பில் மாணவர்கள் பங்கெடுக்க தொடர்ச்சியாக தனது முனைப்பினை அளித்துவருகிறார்.மாணவர்களின் இந்ததொடர்சாதனைக்கு இவரது அரியமுயற்சியும் மிகமுக்கியமான காரணமாகும்.

கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலா்களான பேரா.சுபாஷினி, பேரா.நாகராஜன் மற்றும் தேசிய மாணவா்படை அலுவலர் லெப்டினெட்விவேக் ஆகியோரின் பணியைப்பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க