• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிணற்றை அன்பளிப்பாக தர தயார்-ஓ.பன்னீா் செல்வம்

July 17, 2017 தண்டோரா குழு

தேனி பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனது கிணறு, மற்றும் நிலத்தை அன்பளிப்பாக தர உள்ளதாக ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனி லட்சுமிபுரத்தில் உள்ள பன்னீா் செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணறு தோண்டப்பட்டு, ஆழ்துளையிட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.மேலும் இந்த கிணற்றால் பெரியகுளம் பகுதியில் உள்ள பிற கிணறுகளில் நீா் வற்றிவிட்டதாக ஊா் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில தினங்களாக ஊா் பொதுமக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினா். இதற்கிடையில் கடந்த வாரம், ஓ.பன்னீா் செல்வம் தரப்பில் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீா் செல்வம்,

தனக்கு சொந்தமான கிணற்றையும்,நிலத்தையும் கிராம மக்களுக்கு அன்பளிப்பாக தர தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க