• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் – மு.க. ஸ்டாலின்

March 18, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும் என்று சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இது குறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

“தில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் வேதனைக் குரலுக்கு மத்திய அரசு நியாயம் வழங்க வேண்டும். தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் கடந்த 5 நாட்களாகப் போராடி வருகின்றனர்.

அவர்கள் மீது அக்கறை செலுத்த தமிழக அரசு தயாராக இல்லை. எனவே, தமிழக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்.

காவிரி நதி நீர் கிடைக்காமல் டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் எல்லாம் கருகி வருகின்றன. இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் கடன்களை முழுமையாக அ.தி.மு.க. அரசு ரத்து செய்யவில்லை. மாநில அரசு, விவசாயிகளை ஒட்டுமொத்தமாக வஞ்சித்துவிட்டது. மத்திய அரசும் தமிழகத்தின் உரிமைகளை தொடர்ந்து புறக்கணிக்கிறது”

இவ்வாறு ஸ்டாலின் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க