• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கடிதம்

March 15, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பிரதமருக்கு தமிழக  முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை அமைக்க வேண்டும்.காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். ஏற்கனவே 4 வாரங்கள் ஆனதால் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும். இவ்விவகாரத்தில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம் எனக் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்  நகலையும், கடிதத்துடன் இணைத்து பிரதமருக்கு முதல்வர் அனுப்பியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு மவுனம் சாதிப்பதால் தமிழக மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறோம்.

மேலும் படிக்க