• Download mobile app
17 Mar 2026, TuesdayEdition - 3688
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையில் 54 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர்

July 8, 2017 தண்டோரா குழு

சட்டப்பேரவையில் கடந்த இரு நாட்களாக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் காவல்துறையில் 54 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அவற்றில் சில,

ரூ.50 லட்சம் செலவில் கையடக்க ஜாமர் சாதனம் வாங்கப்படும்.

100 காவல் நிலையங்களில் ரூ.2.50 கோடியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

தமிழ்நாடு காவல்துறையினருக்காக சைபர் அரங்கம் ரூ.3.71 கோடியில் உருவாக்கப்படும்.

சென்னை கொண்டித்தோப்பில் காவலர் சிறப்பு அங்காடி ரூ.8 லட்சத்தில் அமைக்கப்படும்.

பொள்ளாச்சியில் போக்குவரத்து காவல்நிலையம் அமைக்கப்படும்.

ரூ.35 லட்சம் செலவில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் சாதனங்கள் மற்றும் ரூ.25 லட்சம் செலவில் சைபர் ஆப்டிக் கண்காணிப்பு சாதனங்கள் வாங்கப்படும்.

போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்காக ரூ.54.4 லட்சம் மதிப்பில் 2 மீட்பு வேன்கள் வாங்கப்படும்.

காவல்துறையினருக்கு வழக்கப்படும் வெகுமதியுடன் கூடிய ரொக்கத்தொகை ரூ.15,000 வரை உயர்வு.

சென்னை அசோக் நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் ரூ.4.28 கோடியில் புதிய கட்டடம் அமைக்கப்படும்.

முதலமைச்சரின் காவலர் பதக்கம் பெற்றவர்களுக்கு பதக்கப்படி ரூ.300 ஆக உயர்த்தப்படும்.

சைதாப்பேட்டை, ஈரோடு, கூடலூர், வெள்ளக்கோவில், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு துறையினருக்கு குடியிருப்புகள் அமைத்துத்தரப்படும்.

தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறையினர் இடர்படி ரூ.900 வரை அதிகரிக்கப்படும்.

கோவை, சேலம், தருமபுரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிய காவல்நிலையங்கள் உருவாக்கப்படும்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வளாகத்தில் ரூ.99 லட்சம் மதிப்பில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும்.

வீரதீர செயலுக்காக முதல்வரின் காவல் பதக்கம் பெற்றவர்களுக்கான பணப்படி ரூ.900 ஆக உயர்த்தப்படும்.

மேலும் படிக்க