• Download mobile app
23 Aug 2025, SaturdayEdition - 3482
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற வருடாந்திர விளையாட்டு போட்டிகள்

August 22, 2025 தண்டோரா குழு

கோவை மாவட்டம் இராமநாதபுரம் பகுதியில் கார்மல் கார்டன் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகின்றது. இப்பள்ளியின் வருடாந்திர விளையாட்டு போட்டிகள், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் முதன்மை விருந்தினராக, கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ்,முதன்மை குரு ஜான் ஜோசப் தானிஸ் அடிகளார் மற்றும் 4வது பட்டாலியன் அணியின் துணை தளபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர் ராஜ்,பள்ளியின் தாளாளரும் முதல்வருமான,ஆரோக்கிய ததேயூஸ் ஆகியோர் கலந்து கொண்டு,தேசிய கொடி ஏற்றி ஏற்றி வைத்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு போட்டிகளை துவங்கும் விதமாக, ஒலிம்பிக் தீபம் ஏற்றபட்டு,சமாதானத்தின் அடையாளமாக வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டது.பின்னர் பள்ளி என்சிசி மாணவர்களின் படை அணிவகுப்பு மரியாதை செலுத்தபட்டது.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர் ராஜ் படை அணிவகுப்பு மரியாதை செலுத்தியதை தொடர்ந்து பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ச்சியாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான, 100 மீட்டர் ஒட்ட பந்தயம், 200 மீட்டர் ஓட்ட பகுதயம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உள்ளிட்ட தொடர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.மேலும் கூடுதல் சிறப்பம்சமாக பள்ளியில் கராத்தே பயிலும் மாணவர்கள், தங்களது உடலின் மீது இரு சக்கர வானத்தை ஓட விட்டும்,நான்கு சக்கர வாகனத்தை கைகளில் ஏற்றியும் தங்களது திறன்களை வெளிப்படுத்தினர்.

மேலும் முகத்தில் ஒடுகளை உடைத்தல், பற்றி எரியும் கம்பை சுற்றுதல், சிலம்பாட்டம்,மான் கொம்பு விளையாட்டு என பல்வேறு திறமைகளை மாணவர்கள் வெளிபடுத்தியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில், முன்னாள் மாணவர் நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜோ.தன்ராஜ், அருட்தந்தையர்கள்,அருட் சகோதரர்கள், அருட்சகோதரிகள்,பள்ளியின் முதல்வர்கள், மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க