 January 25, 2023
January 25, 2023  தண்டோரா குழு
தண்டோரா குழு
                                கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
இதன் ஒருபகுதியாக கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட காந்திபுரம் 4 வது வீதியில் நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள். சுமார் 40 மேற்பட்ட கடைகளின் ஆக்கிரமிப்பு, அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள், சாலை மற்றும் மழைநீர் வடிகால்களை ஆக்கிரமிப்பு கட்டப்பட்ட சாய்தளங்கள் என ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.