• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலியை முதலில் விஷம் அருந்த சொல்லிவிட்டு தப்பித்த காதலன்

April 19, 2017 தண்டோரா குழு

திருமணத்திற்கு பெற்றோர் மறுத்ததால் காதலியை விஷம் அருந்த சொல்லிவிட்டு காதலன் தப்பித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பல்லவநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி விஜயபிரபு. இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

அப்போது, விஜயலட்சுமியை முதலில் விஷம் அருந்தி சொல்லியிருகிறார் விஜயபிரபு அவரும் காதலரை நம்பி விஷம் அருந்தியுள்ளார். ஆனால், விஜயபிரபு விஷம் அருந்த மறுத்துவிட்டார்.எனினும், அவர் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், மகளை தற்கொலைக்கு தூண்டியதாக விஜயபிரபு மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயலட்சுமியின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க