• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காதலனுடன் போனில் பேசியதால் மகளை சுட்டுக்கொன்ற தந்தை

May 13, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேசத்தில் காதலனுடன் தொலைபேசியில் பேசிய மகளை, தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்பாலில் வசித்து வருபவர் சீமாராஜ். இவருக்கு ரூபி என்ற 18 வயது உள்ளார். இவர் இப்ராஹிம் என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு பெண்ணின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் வீட்டிலிருந்த ரூபி தனது காதலனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை சீமாராஜ் மகளை துப்பாக்கியால் 2 முறை சுட்டுள்ளார். இதில் முகம் மற்றும் மார்பில் குண்டு பாய்ந்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, சுட்டுக் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க