• Download mobile app
04 Jun 2026, ThursdayEdition - 3767
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காணொலிக் காட்சி மூலம் ஆஜராகவுள்ள சசிகலா

May 4, 2017 தண்டோரா குழு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணையில், காணொலிக் காட்சி மூலம் ஆஜராக சசிகலாவுக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தனியார் தொலைக்காட்சிக்கு உபகரணங்கள் வாங்கியதில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக கூறி சசிகலா மீது 1996-ம் ஆண்டு அமலாக்க பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரகிரஹாவில் உள்ள சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா காணொலி காட்சி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என அவர் தரப்பில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வந்த போது சசிகலாவின் கோரிக்கையை நீதிபதி ஏற்றார். மேலும், இதுதொடர்பாக கர்நாடக சிறைத்துறை, உள்துறை ஆகியவற்றிடம் அனுமதியைப் பெற்று அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.மேலும் இரண்டு வாரத்தில் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க