• Download mobile app
21 Sep 2026, MondayEdition - 3876
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் – ரவிசங்கர் பிரசாத்

December 30, 2016 தண்டோரா குழு

பிரதமர் நரேந்திர மோடி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறி வரும் காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து புது தில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ரவிசங்கர் பிரசாத் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:

பிரதமர் நரேந்திர மோடி மீதும், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா மீதும், அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இது போன்ற பொய்ப் புகார்களைக் கூறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய்ப் புகார் கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.

பழைய ரூபாய் 500, 1000 வாபஸ் நடவடிக்கைக்குப் பின் நடைபெற்ற உள்ளாட்சிகள் மற்றும் இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய காங்கிரஸ் கட்சி, அதிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மேலும் படிக்க