• Download mobile app
26 Jun 2026, FridayEdition - 3789
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி

June 26, 2026 தண்டோரா குழு

தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக விளையாட்டுகளைப் பள்ளி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில், போகோ (POGO) சேனல் தமிழ் திருவிழா எனும் பிரத்யேகப் பள்ளித் தொடர்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த 200 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சென்றடைவதே இதன் நோக்கமாகும். டிஜிட்டல் திரைகளைத் தாண்டி, சோட்டா பீம், லிட்டில் சிங்கம் மற்றும் சம்பத் ஷம்பத் போன்ற புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் மாணவர்கள் தமிழ் பாரம்பரியத்தை நேரில் அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சைமன் சேஸ் விளையாட்டின் தமிழ் வடிவம்,
வேடிக்கையான மாறுவேட ரிலே பந்தயம்,
சம்பத் ஷம்பத் உடனான கலகலப்பான வேகப் போட்டி,தமிழ் உணவு, சினிமா மற்றும் கலாச்சாரம் குறித்த வினாடி-வினா.
இந்தத் திட்டத்திற்கு பிரிட்டானியா மில்க் பிகிஸ் முதன்மை ஸ்பான்சராகவும், அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் குளுக்கோவிட்டா குளுக்கோஸ் லாலிபாப் ஆகியவை இணை ஸ்பான்சர்களாகவும் செயல்படுகின்றன.

இது குறித்து வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் விளம்பர வருவாய்த் தலைமை அலுவலர் தனஸ் மேத்தா கூறுகையில்,

குழந்தைகளுக்குப் பிடித்த கதாபாத்திரங்களுடன் இணைந்து, அவர்களின் பாரம்பரியத்தைப் பெருமையுடன் கொண்டாடும் ஒரு தளமாக இது அமையும் என்றார். சந்தைப்படுத்தல் தலைமை அலுவலர் ஜானவி வியாஸ் பேசுகையில், மாணவர்கள் விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் கலாச்சாரத்தோடு ஆழமாக இணைய இது உதவும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க