November 11, 2026
தண்டோரா குழு
கோவை PSG மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சிகிச்சை மற்றும் தங்கும் வசதிகளை மேம்படுத்தும் வகையில், புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட A Block Extension கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள 200 சிறப்பு வார்டு அறைகள் திறந்து வைக்கப்பட்டன.
இதற்கான திறப்பு விழாவில் PSG மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் பேராசிரியர் டாக்டர் T.M. சுப்பா ராவ் மற்றும் PSG சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வருண் ஆகியோர் கலந்து கொண்டு, புதிய வார்டு அறைகளைத் திறந்து வைத்தனர்.
இந்த விரிவாக்கத்தின் மூலம் நோயாளிகளுக்கான தங்கும் வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.