• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல் போன்று மாறி வரும் சிறுவன்

February 3, 2017 தண்டோரா குழு

வங்கதேசத்தில் எட்டு வயது சிறுவன் அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்டு கல் போன்று மாறி வருகிறான்.

வங்க தேசத்தின் வட பகுதியில் உள்ள நாவ்கான் மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது மெஹந்தி ஹாசன் என்னும் சிறுவன், அரிய வகை தோல் வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளான். அவனுடைய தோல் தடித்த செதில் போன்றும் மணல்களில் இருக்கும் கற்களைப் போல மாறி வருகிறது.

அவனுடைய தாய் ஜஹானாரா பேகம் கூறியதாவது:

“இந்த அரிய வகை நோயின் பாதிப்பால், மற்ற சிறுவர்கள் அவனை வெறுக்கின்றனர். கிராமத்து மக்கள் அவனை இழிவாகப் பார்க்கின்றனர். அவனைக் கண்டால் பயந்துவிடுகின்றனர். சிலர் அவனைப் பற்றி அவதூறாகப் பேசுகின்றனர். இது அவனுக்கு மன வேதனையை தரும் என்பதால் அவனை வீட்டிலேயே இருக்கிறான்.

அவன் வலியால் துடிக்கும்போது, என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனுடைய தோல் தடித்த செதில் போல இருப்பதால், யாராவது தொட்டாலும் அவனுக்கு அதிக வலியைத் தருகிறது”.

இந்த நோயின் அறிகுறி பிறந்த 12 நாட்களிலேயே தெரிய ஆரம்பித்துள்ளது. அவனுடைய உடம்பில் தடித்தல் போன்ற தோன்றி உடம்பு முழுவதும் பரவுவதை அவனுடைய பெற்றோர் கண்டுள்ளனர். உடனே அவனை மருதுவர்களிடன் காண்பித்துள்ளனர்.

அவனுடைய தந்தை அபுல் கலாம் ஆசாத் கூறுகையில், “இந்த நோயின் காரணம் என்ன என்று மருத்துவர்களுக்கே தெரியவில்லை. இது ஒரு அரிய வகை தோல் வியாதி என்றனர். ஆனால், இதைக் குணப்படுத்த முடியவில்லை. வாகனம் ஒட்டிப் பிழைக்கும் எனது பணம் அவனுடைய சிகிச்சைக்கே செலவாகி விடுகிறது. அதனால் என்னிடம் பணம் இல்லை. அவனை மருத்துவர்களிடம் அழைத்துச் செல்வதைக்கூட நிறுத்திவிட்டேன்” என்றார்.

ஆசாத் பேகம் தம்பதினருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உண்டு. அவனுக்கு சிகிச்சை அளிக்க ஒரு நல்ல மருத்துவரை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்று வங்க தேச அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளார் பேகம்.

“என் மகனை தயவு செய்து காப்பற்றுங்கள் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன். அவன் வேதனைப்படுவதை என்னால் பார்க்க முடியவில்லை. எனக்கு ஏன் இந்த வேதனை என்று அழுதுகொண்டு அவன் கேட்கிறான். அல்லா அவனை வித்தியாசமாகப் படைத்துள்ளார். அவன் நன்கு படித்து, நல்ல, ஆரோக்கியமான வாழ்கை வாழ உதவுவார் என்று கூறி வருகிறேன்” என்று பேகம் கூறினார்.

மேலும் படிக்க