• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கருப்பை புற்றுநோயை கண்டறிய புதிய கருவி கண்டுபிடிப்பு

July 10, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் நிம்மி ராமானுஜம் மற்றும் அவருடைய குழு கர்ப்பப்பை புற்றுநோய்(Cervical Cancer) கண்டறியும் சாசனத்தை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் வட கரோலினாவின் டியுக் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும்பேராசிரியர் நிம்மி ராமனுஜம் மற்றும் அவருடைய ஆராய்ச்சி குழுவினர், பெண்களின் கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை வலியில்லாமல் கண்டறியும் சிறிய சாசனத்தை உருவாகியுள்ளனர். இந்த சாசனத்திற்கு ‘பாக்கெட் சொல்போஸ்கோப்’ என்று பெயர்.

இது குறித்து பேராசிரியர் நிம்மி ராமானுஜம் கூறுகையில்,

நாங்கள் உருவாக்கிய கோல்போஸ்கோப், பெண்கள் மாதவிடாயின்போது கருப்பையில் இருந்து பிறப்புறுப்புக்கு வரும் இரத்தத்தை உறுஞ்சும் உறிபஞ்சுகளைபோல் இருக்கும். அதில் ஒளி மற்றும் கேமரா பொருத்தப்பட்டிருக்கும். இதனை பயன்படுத்தி பெண்களின் கர்ப்பப்பை புற்றுநோயை வலியில்லாமல் கண்டறிய முடியும்” என்று கூறினார்.

பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில், கர்ப்பப்பை புற்றுநோய் நான்காவது இடத்தை பிடித்தள்ளது. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 1௦,௦௦௦க்கு மேற்பட்ட புற்றுநோய் நோயாளிகள் கண்டறியப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க