• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓ.பி.எஸ் அணியை இணைப்பது குறித்து தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது – செங்கோட்டையன்

April 18, 2017 தண்டோரா குழு

ஓ.பி.எஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் அதிமுக துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக முயற்சிகள் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று இரவு 2௦க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்று கூடி அமைச்சர் தங்கமணி வீட்டில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அமைச்சர்கள் செங்கோட்டையனும், திண்டுக்கல் சீனிவாசனும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைச் இன்று சந்தித்துப் பேசினர். அதன் பிறகு அமைச்சர்கள் இருவரும் தினகரனின் இல்லத்திற்கு சென்று இரு அணிகள் இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில்

“ஓ.பி.எஸ் அணியை இணைப்பது குறித்தும் இரட்டை இலை சின்னத்தை மீட்பது குறித்தும் துணை பொதுச்செயலாளர் தினகரனுடன் ஆலோசிக்கப்பட்டது,” என்றார்.

மேலும் படிக்க